Sunday, 28 June 2009

கேள்விகள்...பதில்கள்..

1. உங்களுக்கு ஏன் இந்தப் பெயர் வந்தது? உங்களுக்கு உங்க பெயர் பிடிக்குமா ?

நிச்சயமாய் பிடிக்கும் .. நானே வைத்துக் கொண்ட பெயர்தான் பாரதி ..நான் ஹலோ பண்பலையில் 'இவள்' என்ற நிகழ்ச்சியினை தயாரித்து வழங்கியதால் இவள் பாரதி என்ற பெயர் பரவலாகி... என்னையும் பற்றி கொண்டது..

2.கடைசியாக அழுதது எப்பொழுது?

நேற்று இரவு.. அம்மாவினை நினைத்து அழுது தீர்த்தேன்.. இந்த உலகில் எந்த நிபந்தனையும் நிர்பந்தமும் இன்றி nesikkum உயிர் அம்மா மட்டும்தான்..
அவளின் இழப்பினை சில பாடல்களும் காட்சிகளும் நினைவூட்டும் சமயங்களில் பீறிட்டெழும் அழுகையினை என்னால் கட்டுப்படுத்த முடிவதில்லை..

3.உங்களோட கையெழுத்து உங்களுக்கு பிடிக்குமா?

பிடிக்கும்..என்னுடைய கையெழுத்து என் மன நிலையினை பிரதிபலிப்பதாக இருக்கும்.. எனக்கு மனம் உற்சாகமாக இருந்தால் கையெழுத்து அழகாகவும்,மனம் சோர்வுற்று இருந்தால் சுமாராகவும், பேட்டி எடுக்கும் சமயங்களில் அடுத்தவர்க்கு புரியாத வகையிலும் இருக்கும்..


4).பிடித்த மதிய உணவு என்ன?

மீன் குழம்பு, ரசம் , பருப்பு கூட்டு, முருங்கை கீரை,கோழி , உருளை

5.நீங்கள் வேறு யாருடனாவது உங்களோட நட்பை உடனே வச்சுக்குவீங்களா?
நான் நட்பாயிருக்கிறேன் என்னை பற்றி தெரிந்து கொள்ள ஆர்வமாய் இருப்போர்களிடம்.. நான் என் நட்பை தொடர்கிறேன்... அவர்கள் எனக்கு எதிரிகளாவர்கள் என்ற புரிதல் இருந்த போதிலும்..(ஏனெனில் நண்பர்கள் வெற்றிக்கு துணையாய் இருப்பார்கள்.. எதிரிகள் வெற்றிக்கு காரணமாய் இருப்பார்கள்)

6.கடலில் குளிக்க பிடிக்குமா....அருவியில் குளிக்க பிடிக்குமா?

இரண்டிலும் குளித்திருக்கிறேன்.. அருவியில் குளிக்க மிக பிடிக்கும்.. அருவியின் வீழ்ச்சி ஒரு எழுச்சி எனும் தத்துவத்திலும் பிடிக்கும்.. கடலில் கால்கள் நனைத்து விளையாட பிடிக்கும்.

7.முதலில் ஒருவரைப் பார்க்கும் போது எதை கவனிப்பீர்கள்?

உடல் மொழியையும், தோற்றத்தையும், பேச்சின் நோக்கத்தையும்..

8. உங்க கிட்ட உங்களுக்கு பிடித்த விஷயம் என்ன? பிடிக்காத விஷயம் என்ன ?

எல்லோரிடமும் சகஜமாக பேசி விடுவது.. யார் என்ன சொன்னாலும் என் மனதுக்கு சரியான விஷயத்தை மட்டும் செய்வது.. எதையும் முயற்சி செய்து பார்த்து விடுவது..எனக்கு பிடித்த விஷயம்..


கொஞ்சம் சோம்பல், கொஞ்சம் கவன குறைவு, ஒருவரை பற்றிய கருத்தை அவரிடமே சொல்லி விடுவது எனக்கு பிடிக்காத விஷயம்...


யார் பக்கத்தில் இல்லாம இருக்குறதுக்கு வருந்துகிறீர்கள்?

என் அம்மா.. என் வாழ்வில் இருந்து முற்றிலும் உள்ளார்ந்து உபயோகப்படுத்த முடியாமல் போனது அந்த மூன்றெழுத்து சொல்..

11.இதை எழுதும் போது என்ன வர்ண ஆடை அணிந்து உள்ளீர்கள்?

சம்பல் நிற ஜீன்சும், மயில் பச்சை நிற டாப்சும்..

12.என்ன பாட்டு கேட்டுக் கொண்டு இருக்குறீங்க ?

என் காதலே.. என் காதலே.. என்னை என்ன செய்ய போகிறாய்..?

13.வர்ண பேனாக்களாக உங்களை மாற்றினால் என்ன வர்ணமாக உங்களுக்கு ஆசை?

நீலம்..

14.பிடித்த மணம்?

வார்னிஷ் மணம், பெட்ரோல் மணம், மண் தொடும் மழை வாசம், என் அம்மாவின் கழுத்தில் எழும் மஞ்சள் வாசம், அவள் கடைசியாக உடுத்தி இருந்த சேலையின் வாசம்..குழந்தைகளின் மேல் எழும் பால் வாசம்.. (பக்கத்து வீட்டு ரோசிக்குரெண்டு வயசாகுது அவளோட வாசம்)

5. பிடித்த விளையாட்டு?

செஸ்

16.கண்ணாடி அணிபவரா?

இல்லை.. பார்ப்பது மட்டும்..

17.எப்படிப் பட்ட திரைப்படங்கள்.. பிடிக்கும்?

கதாநாயகர்களை மையப்படுத்தாமல் கதையை மயப்படுத்தி எடுக்கப்படும் சிறந்த திரைப்படங்கள்..

18.கடைசியாகப் பார்த்த படம்?

பேராண்மை

19.பிடித்த பருவ காலம் எது?

மழைக்காலம்..

20. இப்பொழுது படித்துக்கொண்டு இருக்கும் புத்தகம் ..

கல்யாண்ஜி கவிதைகள்.. கி.ரா மற்றும் கழனியூரனின் மறைவாய் சொன்ன கதைகள்.. மஞ்சள் வயலில் வெறி பிடித்த தும்பிகள் (மனோரமா பிஸ்வால் - ஒரிய மொழி பெயர்ப்பு கவிதைகள்.. )

21. உங்கள் டெஸ்க்டொப்-ல் இருக்கும் படத்தை எத்தனை நாளுக்கு ஒரு நாள் மாற்றுவீர்கள்?
மெயில் பார்க்கும் போதெல்லாம்..

22.உங்களுக்கு பிடித்த சத்தம் ? பிடிக்காதசத்தம்?

பிடித்த சத்தம் : மழை, எனது அன்புக்குரியவரின் குறுஞ்செய்தியை சுமந்து வரும் அலைபேசி சத்தம்

பிடிக்காத சத்தம்: வெடி, ஹார்ன், ஸ்பீக்கர் சவுண்ட்

23.வீட்டை விட்டு நீங்கள் சென்ற அதிக பட்ச தொலைவு?

புது டெல்லி

24.உங்களுக்கு ஏதாவது தனித் திறமை இருக்கிறதா?
presence of mind..

25.உங்களால் ஏற்றுக் கொள்ள முடியாத ஒரு விஷயம்?
நம்பிக்கை துரோகம்.

26.உங்களுக்கு உள்ளே இருக்கும் சாத்தான்?

சோம்பேறித்தனம்

27.உங்களுக்கு பிடித்த சுற்றுலா தலம்?
எங்கெங்கு நூலகமோ அங்கெல்லாம்..

28.எப்படி இருக்கணும்னு ஆசை?

நானாகவே..

29.வாழ்வு பற்றி ஒரு வரி சொல்லுங்க..?

வாழ்ந்து பாருங்கள்.. அது ஒரு அழகிய கவிதை சில நேரம் பிழைகளோடு..

6 comments:

  1. தங்களை சற்றே அறிய தந்தமைக்கு நன்றி.

    13, 15, 16 - நானும் இதே போன்றே கூறியிருந்தேன்.

    16 அப்படியே.

    வாழ்வு பற்றி அருமையா சொல்லியிருக்கீங்க.


    [[சில கேள்விகள் மிஸ்ஸிங்கோ ...]]

    ReplyDelete
  2. வணக்கம் 'இவள் தேவதை',

    முதலில் பெரிய வணக்கம் கூடவே நன்றியும் என் வ.பூவிற்கு வருகை தந்ததிற்கு.

    கேள்வி பதில் ஒரு சுய அலசல் போல நல்லாத் தான் இருக்கு... ஆனால் சிலவற்றிக்கு (தமிழை)ஆங்கிலத்தில் வார்த்தைகளை தந்திருக்கிறீர்கள்.

    //உ+ம்:
    சரியா thavaraanu theiryala //

    புதுவித எழுத்துப் பாணியா? (இல்ல... 'இவள் பாரதி' என்ற படியால் கேட்டன்... ஒருவேளை நவீன பாரதி இப்படித் தான் எழுதியிருப்பானோ...? - ம்...)

    சரி நடக்கட்டும்...

    ReplyDelete
  3. enna solla varthigale ellai kavingaruke comments post pannuvathu eyalatha kaariyem

    ReplyDelete
  4. hai bar,
    y didn't u post anything after june?

    anywa, gud day.
    my wishes...

    ReplyDelete
  5. வலைப்பக்க வடிவமைப்பு அழகாக உள்ளது.கேள்வி-பதில் மனதைக்கவர் கிறது.

    வாழ்த்துகள்.

    பரமசிவம்,
    kadavulinkadavul.blogspot.com

    ReplyDelete
  6. வலைப்பதிவின் வடிவமைப்பு அழ
    காக உள்ளது.

    கேள்வி-பதில் மனதைக் கவர்கிறது.

    வாழ்த்துகள்.

    பரமசிவம்,
    kadavulinkadavul.blogspot.com

    ReplyDelete

please post your comment