Saturday, 27 June 2009

காலியான இருக்கை...

ஞாயிற்றுக் கிழமையில்
நிரம்பியிருக்கும்
காலியான இருக்கைகளுடனான
பயணம் இதமானது..

எல்லா சன்னலோர
இருக்கையின் வழியேயும்
நானே தெரிகிறேன்..

வழித்தடங்களெங்கும்
விடுமுறையின் பிரதிபலிப்பு..
சிறுவர்களுக்கு விளையாட்டுகளாகவும்
பெரியவர்களுக்கு பேச்சாகவும்
பெண்களுக்கு எவ்வித மாற்றமின்றியும் ..

பண்பலை வரிசை
விரல்நுனியில் மாறிக்கொண்டிருக்க
என் காதுக்குள்
காற்று ஏதோ சொல்ல முயன்று
தோற்று கொண்டிருந்தது..

3 comments:

  1. அருமையான கவிதை.. ரொம்ப நல்லா எழுதியிருக்கீங்க.

    //நிரம்பியிருக்கும்
    காலியான இருக்கைகளுடனான
    பயணம் இதமானது..

    எல்லா சன்னலோர
    இருக்கையின் வழியேயும்
    நானே தெரிகிறேன்//

    இந்த வரிகள் மிகவும் பிடித்திருக்கிறது.

    ReplyDelete
  2. தோற்றுக்
    கொண்டிருந்தது
    காற்றா ?
    காதா?

    ReplyDelete

please post your comment