Saturday, 27 June 2009

ஸ்பரிசத்தின் மறுபெயர்...

"அணு அணுவாய் சாக
முடிவெடுத்த பின்
காதல் சரியான வழிதான்"..

என்ற கவிதையை காதலிக்காதவர்கள் இருக்க முடியாது...
காதலை பற்றி சொல்வதாகவே சிலர் சலித்துக் கொள்கிறார்கள்
எல்லோருக்கும் தெரிந்த ஒன்றை பற்றி பேசுவதில் தவறென்ன?
இருக்க முடியும் ?

உலகம் மிகப் பெரியது
உலகத்தை விட பெரியது காதல்..
மரணம்தான் மிக வலியானது..
மரணத்தை விட வலியானது காதல்..
அணுதான் மிக சிறியது..
அணுவிலும் சிறியது காதல்..

இப்படி காதல் காற்றைப் போல எங்கும் நிறைந்திருக்கிறது
ஆயினும் சுவாசத்தை தனித்து உணர்வதில்லை..
காதலும் அப்படித்தான்.. உணர்வதில்லை.. உணர்ந்தவர்கள் சரியாக வெளிப்படுத்துவதில்லை..

மழையில்லாத ஊரில் மட்டுமல்ல..
காதலில்லாத ஊரிலும்
கவிதை வெளிநடப்பு செய்துவிடும்..

காதல் மனக்கதவை தட்டியதும் திறந்துவிடாதீர்கள்..
பலமுறை தட்டுகையில் மூடியே வைத்திருக்காதீர்கள்..

காதலும் ஒரு அனுபவம்..
உணரத்தான் முடியும் அதன் வலியையும்..சந்தோசத்தையும்...

உணர்வோம்..காதலை காதலால்..
ஸ்பரிசத்தின் மறுபெயரும் அதுவே.
.

4 comments:

  1. //காதலை பற்றி சொல்வதாகவே சிலர் சலித்துக் கொள்கிறார்கள்
    எல்லோருக்கும் தெரிந்த ஒன்றை பற்றி பேசுவதில் தவறென்ன?
    இருக்க முடியும் ?//

    //மழையில்லாத ஊரில் மட்டுமல்ல..
    காதலில்லாத ஊரிலும்
    கவிதை வெளிநடப்பு செய்துவிடும்..

    காதல் மனக்கதவை தட்டியதும் திறந்துவிடாதீர்கள்..
    பலமுறை தட்டுகையில் மூடியே வைத்திருக்காதீர்கள்..//

    அழகான வரிகள்! பகிர்விற்கு நன்றி..

    ReplyDelete
  2. காதலும் ஒரு அனுபவம்..
    உணரத்தான் முடியும் அதன் வலியையும்..சந்தோசத்தையும்...
    ///
    உணர்வு பூர்வமான கவிதை!!

    ReplyDelete
  3. குறைந்தபட்சம் ,
    காதலிக்கலாம் ...
    காதல் பற்றிய
    எந்தக் கவிதையையும்!

    ReplyDelete
  4. அருமையான கற்பனை வாழ்த்துக்கள் !

    ReplyDelete

please post your comment