Wednesday, 15 April 2009

பரமபதம்

ஏணியின் உச்சியை
தொடும் வேளையில்
பாம்பொன்று கொத்தி
சடாரென விழுகிறேன்..

நட்பென்னும்
பரமபதத்தில்
வீழ்வதும் எழுவதும்
உருட்டப்படும் கட்டைகளின்
தாயத்தை பொறுத்தமையும்..

தயங்களும் காயங்களும்
எப்போது விழுமென்று
யாராலும் யூகிக்க
முடிவதில்லை..

வெற்றி பெறவோ
தோல்வியுறவோ
தயாரான நிலையில்
பூச்சியத்திலிருந்து
ஆட்டத்தை துவங்குகிறேன்
மீண்டும்...

2 comments:

  1. வணக்கம் எம் தமிழ் உறவுகளே நாங்கள் ஆரம்பித்துள்ள www.tamilseithekal.blogspot.com பிளாகுக்கு உங்கள் அனைவரது ஆதரவு தேவை உங்கள் இணையதளத்திலோ அல்லது பிளாகிலோ எங்களுடைய பிளாகையும் இணைக்கும் படி தாழ்மையுடன் கேட்டுக்கொள்கின்றோம்..

    அன்புடன்
    தமிழ்செய்திகள் team

    ReplyDelete
  2. வித்தியாச‌மான‌ க‌விதை.

    ப‌ர‌ம‌ப‌த‌த்தை ந‌ட்பாக‌ உருவ‌க‌ப்ப‌டுத்த‌ப் ப‌ட்ட‌ உங்க‌ள் திற‌னை க‌ண்டு வியக்கிறேன்.

    ReplyDelete

please post your comment