பொடிசி
சாலையில் காரை இயக்கவும், சமையலறையில் மாவை அரைக்கவும், சூரிய ஒளியால் முடியுமென்றால் அது ஆச்சர்யம்தானே...சூரிய ஒளியால் இயங்கக்கூடிய காரில் பொருத்தப்பட்டிருக்கும் பேட்டரியே வீட்டிலிருக்கும் மின்விசிறி, மின்விளக்கு, கிரைண்டர், மிக்ஸி, டி.வி.ஆகியவற்றையும் இயக்குகிறது.
சோலார் காரை கண்டுபிடித்த ராஜசேகரிடம் பேசியபோது, "மின்தட்டுப்பாடு, பெட்ரோல் விலையேற்றம்னு பல பிரச்சினைகள் நம்மை சிரமப்படுத்துது. இதுக்கு என்ன தீர்வுனு ஓர் ஆறு மாசமா செஞ்ச முயற்சியிலதான் சூரிய ஒளியில ஓடக் கூடிய காரை கண்டுபிடிச்சேன். இன்னும் சில வேலைகள் அதுல செய்ய வேண்டியிருக்கு. ஆனாலும் இதை இப்பவே ஓட்டிட்டுதான் இருக்கேன். இந்த காரோட மேற்கூரையில சோலார் தகடு பொருத்தியிருக்கேன். இது 25 வருஷத்துக்கு பழுதாகாது. இதன் மூலமா பேட்டரியில சேமிக்கப்படுற மின்சாரத்துல 30 கி.மீ. வேகத்துல 50 கிலோமீட்டர்ல இருந்து 200 கிலோமீட்டர் வரை காரை ஓட்டலாம். வீட்டுல கரண்ட் இல்லாத நேரத்துல இதுல இருக்கிற பேட்டரியில கனெக்ஷன் கொடுத்து ஒரே நேரத்துல டி.வி., ஃபேன், ட்யூப்லைட், மிக்ஸி போட்டுக்கலாம். ஆனா, கிரைண்டர் யூஸ் பண்ணும்போது வேற எதுவும் போடக் கூடாது. சூரிய ஒளியில ஒருநாள்லசேகரிக்கிற மின்சாரத்துல இதை எல்லாம் செய்ய முடியும்" என்று அவர் சொல்லும்போதே, ‘வர இருக்கும் மழைக்காலத்தில் இது எப்படி இயங்கும்?’ என்ற கேள்வி எழ... அதற்கும் பதில் தயாராய் இருக்கிறது ராஜசேகரிடம்.
"மழைநேரத்துல அல்லது மேகமூட்டம் மாதிரி சூரிய ஒளி கிடைக்காத சமயங்கள்ல வீட்டுல இருக்கிற கரண்ட்ல செல்போனுக்கு சார்ஜ் போடுற மாதிரி இந்த பேட்டரியையும் சார்ஜ் போட்டுக்கலாம். இது ஒருத்தர் மட்டும் உட்கார்ந்து 30 கி.மீ. வேகத்துல செல்லக் கூடியது. அதனால, இதுக்குத் தனியா லைசென்ஸ்வாங்கத் தேவை இல்லை. சுற்றுச்சூழல் மாசுபாடும் இல்லை. இதைத் தயாரிக்க 45,000 ரூபாய் செலவாகிறது. அடுத்ததாக, இரண்டு பேர் உட்கார்ந்து செல்லக்கூடிய காரை வடிவமைக்கப் போறேன்" என்றார்.
ராஜசேகரன், திட்டக்குடி |
முன்பு பைக்!
38 வயதாகும் ராஜசேகருக்கு பெயிண்டிங், வெல்டிங், டிங்கரிங், மெக்கானிக், எலெக்ட்ரிக் போன்ற பல வேலைகள் தெரிந்திருப்பது இந்த காரை வடிவமைக்க பேருதவியாக இருந்துள்ளது. ராஜசேகர், திட்டக்குடியில்உள்ள ஒரு மெடிக்கலில் மருந்தாளுநராகவும், லேப் டெக்னீசியனாகவும் இருக்கிறார். இதற்கு முன் 2008ல் சூரிய ஒளியில் இயங்கக்கூடிய பைக்கை வடிவமைத்திருக்கிறார். அந்த அனுபவமே இப்போது காரை வடிவமைக்கவும் தூண்டுகோலாக இருந்திருக்கிறது.
நன்றி: புதிய தலைமுறை, ஜூலை 12, 2012 (பக்கம்
58)
இவள் பாரதி
No comments:
Post a Comment