Friday, 29 August, 2008

ஸ்பரிசம்-2

ஜன்னல்களை வருடிப் போகும் தென்றலைத்
தண்டிக்க ஜன்னலுக்கு உரிமை இருக்கிறதா?
இல்லை- ஆனால் நம்மை நேசிக்கிற
ஒரு ஜீவனுக்கு மறுப்பு
சொல்ல நமக்கு உரிமை இருக்கிறது...எப்படி?

காதலைச் சொல்ல யாருக்கும்
உரிமை இருப்பது போல மறுப்பதற்கு
நமக்கும் உரிமை இருக்கிறது..
யாராவது நம்மகிட்ட காதலை சொல்லும் போது
நாம மறுக்கிற சந்தர்ப்பத்தை போல..

நம்ம காதல் நிராகரிக்கப்படும்போது
அதை ஏத்துக்குற பக்குவம் வேணும்..
இவங்க நமக்கு வாழ்க்கைத் துணையா
வந்தா நல்லாயிருக்கும்னு நம்ம மனசுக்கு தோணும்..
ஆனா அவங்களுக்கும் தோணனுமே?..

"என் காதலை உங்கிட்ட சொல்லிட்டேன்..
நல்ல பதிலா சொல்லுனு" நமக்கு பிடிச்சவங்க
இல்லனா நெருக்கமா இருக்குறவங்க கோரிக்கை
வைக்கும்போது மனசு பதைக்கும்..
படபடக்கும்..என்ன பண்றது?

அது மட்டுமில்ல..
"நீ முடியாதுனு சொன்னா அந்த வார்த்தைய
தாங்கிக்க எனக்கு இன்னொரு ஜென்மம் வேணும்"
அப்டின்னா என்ன புரியுது?
இன்னொரு ஜென்மம்னா இந்த ஜென்மத்துல
செத்தாதானே முடியும்..

என்ன சொல்றது?
காதல் மட்டுமே வாழ்க்கை இல்லைனு சொல்லிடலாமா?
ஆனா வாழ்க்கைனா காதலும் சேந்ததுதானே?
சரி அப்டினா?
"நினைவுகளோட வாழ்ந்திடு"னு
வாழ்த்தலாமா?
அதை சொல்ல நாம யாரு?

வியப்பின் உச்சம்

வியப்பின் உச்சம் ...

வியர்வையின் விலாசம் ...

விழிகள் விரியும் பரவசம் ...

Thursday, 28 August, 2008

அழகின் ஓவியம்..


அழகின் ஓவியம்..
மணலின் கதை..
மனதின் திரை..
வசீகரிக்கும்......

எது பிரிவு?

எது பிரிவு?
பேசாமல் இருப்பதா?
பார்க்காமல் இருப்பதா?
நினைக்காமல் இருப்பதா?

எது பிரிவு?
விலகி செல்வதா?
விரும்பி செல்வதா?
கடிந்து போவதா?

எது பிரிவு?
பார்த்தும் பார்க்காமல் செல்வது..
பார்த்தும் பேசாமல் செல்வது ..
விரும்பியே விலகி நடப்பது..

Wednesday, 27 August, 2008

தோள் கொடு

என் ரணங்கள்
என் குணங்கள்

என் நிபந்தனை
என் சிந்தனை

என் வேகம்
என் தாகம்

என் வழி
என் வலி

என் முனைப்பு
என் நினைப்பு

என் சொற்கள்
என் அமைதி

என் முகவரி
என் எழுத்து

யாவும் அறிந்தவன்
நீ
மறுக்கவில்லை...

என் ஆசை ஒன்றை
சொல்கிறேன்..
செய்வாயா?

உன் தோளில் சாய்ந்தபடி
இந்த உலகம் அறிய வேண்டும்..

உன் தோள் சாயும் போது
என் கண்ணீர் உதிர வேண்டும்..

உன் தோள் போதும்
என் துயரம் துடைத்தெறிய..
என் உயரம் எட்ட..

உன்னால் மட்டுமே

உன்னால் மட்டுமே புரியக்கூடிய
சில தேவைகள்..

உன்னால் மட்டும் ஆற்றக்கூடிய
சில காயங்கள்..

உன்னால் மட்டுமே உணரக்கூடிய
சில எல்லைகள்...

எதுவும் எனக்கு உற்சாகம் தான்..
ஏனெனில்
நண்பா
உனக்கு மட்டுமே தெரியும்
எனக்கான வலிகள்..

நீ மட்டுமே அறிவாய்
என்னையும்...
என் உலகையும்...

காத்திருப்பு

உனக்காக நானும்
எனக்காக நீயும்
காத்திருந்த பொழுதுகள்
சுகமானவை ...

மழைநாளில் உன்னொடு
நனைந்த நினைவுகள்
இதமானவை...

ஒரு மத்திய நேரத்தில்
பேசப்பட்ட அந்த வார்த்தைகள்
மிதமானவை ...

உன்னாலும் என்னாலும்
சந்திக்க முடியாத நொடிகள்
வலியானவை ....

விமர்சனம்

என்னைக் காயப்படுத்துவதாய்
எண்ணி உன்னால் உதிர்க்கப்பட்ட
விமர்சனங்கள் எல்லாம்
என்னை சோர்வடைய செய்ய வில்லை
நட்பே
உற்சாகப் படுத்தி இருக்கிறது
என் தவறுகள் கவனிக்கப்படுகிறது
என்பதே என் வளர்ச்சியின் அறிகுறிதானே .......

நட்பு

என் வார்த்தைகளுக்கே
விளக்கம் கேட்கும்
பலருக்கு மத்தியில்
என் மௌனத்தையும் மொழிபெயர்க்க
உனக்கு மட்டுமே தெரிந்திருக்கிறது
தோழா

Tuesday, 26 August, 2008

பொன்மொழிகள்

சோம்பேறிகள் காலத்தை மதிப்பதில்லை .
காலம் சோம்பேறிகளை மதிப்பதில்லை .

தோல்வியை கண்டு அஞ்சுபவரிடம் இருந்து வெற்றி விலகி விடுகிறது.

மிக பெரிய சாதனைகள் சாதிக்கப்படுவது வலிமையினால்
அல்ல.விடா முயற்சியினால் மட்டுமே .

பிறருடைய அன்புக்கு பாத்திரமாவதைவிட ,பிறருடைய நம்பிக்கைக்கு பாத்திரமாவதே மேல்.

காலத்தின் மதிப்பு உங்களுக்கு தெரியுமா? அப்படியானால் வாழ்வின் மதிப்பு உங்களுக்கு தெரியும் .

சிந்தனைத் துளிகள்

 1. எதைக் கண்டு ஒரு மனிதனுக்கு சிரிப்பு வருகிறதென்று கவனி.அவன் எப்படிப்பட்டவனென்று மிக நன்றாகத் தெரிந்து கொண்டு விடலாம்.
 2. அன்பு என்பது கண்ணுக்குத் தெரியாத நீரூற்று.அது எப்போது எப்படி தோன்றுகிறது என்பதை நாம் அறிய முடியாது.
 3. செய்யத் தெரிந்தவன் போதிக்கிறான்
  செய்யத் தெரியாதவன் போதிக்கிறான்.
 4. உலகத்திற்கு வேண்டுமானால் நீங்கள் ஒரு ஆளாக இருக்கலாம்
  ஆனால் யாராவது ஒருவருக்கு நீங்களே உலகமாக இருக்கலாம்.
 5. மனிதனின் குற்றங்களில் பெரும்பாலானவை அவனது நாவில் இருந்துதான் பிறக்கின்றன.
 6. தன்னை அதிக புத்திசாலியாக எண்ணுவதே மனிதனிடம் உள்ள மிகப்
  பெரிய பலவீனம்.
 7. நம்முடன் வாழ்வோரைப் புரிந்து கொள்வதற்கு நம்மை நாமே முதற்கண் புரிந்து கொள்வது அவசியம்.
 8. எவர் பிறர் நற்செயல்களைப் பார்த்து மகிழ்ச்சி கொள்ளவில்லையோ அவரால் நல்ல செயல்கள் எதையும் செய்ய முடியாது.
 9. மகிழ்ச்சி என்ற உணர்ச்சி இல்லாவிட்டால் வாழ்க்கை சுமக்க முடியாத பெரிய சுமையாகிவிடும்.
 10. பகலைக் காட்டிலும் இரவுத்தூக்கம் அதிகம்-கனவு காண்பவர்களுக்கு
  இரவுத்தூக்கத்தைக் காட்டிலும் பகல் நேரம் அதிகம்-இலட்சியக் கனவு
  மெய்ப்பட வேண்டுமென எண்ணுபவர்களுக்கு.
 11. உண்மையான செல்வாக்கை நாம் தேடிக் கொள்ளக்கூடாது. அது நம்மை தொடர்ந்து வர வேண்டும்.

Friday, 1 August, 2008

பிரிவு

சில நாட்களுக்கு
முன்பு வரை
என் நினைவுகளில்
கீதமிசைத்த பூபாளம்
இப்பொழுது முகாரியாய்....
இருட்டிலிருந்து
விடுதலையளித்தவளே
பாதாளத்திற்கு
பயணப்பட வைக்கிறாய்...

நீதிமன்றத்தில்
ஒத்திவைக்கப்படும்
வழக்கைப்போல்
மரண மன்றத்தில்
உன் பயணமும்
ஒத்தி வைக்கப்பட்டு...
யுரேனியத்தைப்
பிரயோகிக்கிறது
உன் பிரிவு!

நினைவுகள்

மலைக்கோட்டை உச்சி
மருத்துவமனை வளாகம்
பேருந்திற்கான காத்திருப்பு
பெருமழைக்கு ஒதுங்கிய மரம்
இன்னும் இன்னுமாய் ....

நாம் சென்ற இடங்களைக்
காணும் போது
நினைவோட்டிற்குள்
ஐம்புலன்களும்
சுருங்கிக் கொள்கின்றன..
திடீர் வெளிச்சத்தில்
தானாய் கண்கள்
சுருங்குவது போல..

இப்படியாய்
விளம்பரங்களுக்கிடையே
வந்து செல்லும்
நிகழ்ச்சிகளைப் போல
அன்றாட பணிகளினூடே
வந்து செல்கின்றன
உன் நினைவுகள்..

இவளின் உலகத்திற்குள்
வந்திருக்கும் உங்களுக்கு
நன்றியும்..வாழ்த்தும்..


அமைதி,அழகு,தனிமை

உங்களின் விருப்பம் எது?