Saturday, 27 June 2009

முகமூடி..

அன்று அவன்
குழப்பத்திலிருந்தான்
கையிலிருந்த
நான்கைந்து முகமூடிகளில்
எதை அணிவதென..?

எதேச்சையாய்
எதிர்கொள்ள நேரிட்டதில்
அவனது மனைவிக்கான
முகமூடியை அளித்து
தூவினான் சில சொற்களை..

முகமூடிகள் ஏதுமற்ற நிலையில்..
அவனிடமே கையளித்து
கடந்தேன் அவ்விடத்தை..

வழியினில் கிழிசலான
முகமூடிகள் சில காலில்
ஒட்டி கொள்ள
உதறியும் உதிராத அவைகளுடன்..
பேருந்தேறினேன்..

4 comments:

சு.செந்தில் குமரன் said...

பேருந்துக்குள்
எத்தனை
முகமூடிகள்!?

உமா said...

உங்கள் வலைப்பக்கம் மிக அருமை.கவிதைகள் மிக மிக நன்று.[ஓட்டு போட முடியாமல் செய்துவிட்டிர்களே?] வாழ்த்துக்கள். கவிஞர்.அறிவுமதி அவர்களின் நேர்காணல் அருமை. தொடர்ந்து வருகிறேன்.
அன்புடன் உமா.

மதுரைக்காரன் said...

Awesome posts

chandrapal said...

பந்தயத்தில்
வெற்றி என்பது
வலிமையால் அல்ல
எதிரியின்
பலவீனத்தாலும் வாய்த்துவிடுகிறது.


இவளின் உலகத்திற்குள்
வந்திருக்கும் உங்களுக்கு
நன்றியும்..வாழ்த்தும்..


அமைதி,அழகு,தனிமை

உங்களின் விருப்பம் எது?