Monday 16 July, 2012

அங்கே தடை! இங்கே எப்போ?



இவள் பாரதி

அரசு ஊழியர்கள் அலுவலக நேரத்தில் தமது சொந்த தேவைகளுக்காக செல்போன் பயன்படுத்துவதற்கு தடைவிதித்துள்ளது கேரள அரசு.

அலுவலக நேரத்தில் மணிக்கணக்கில் செல்போனில் தங்கள் சொந்த விஷயங்களைப் பேசிக் கொண்டிருப்பதால் அதிகாரிகளை அவசரத்திற்கு தொடர்பு கொள்ளமுடியவில்லை. அதிகாரிகள் இப்படி வெட்டி அரட்டை அடிப்பதால் முடிக்க வேண்டிய அலுவலக வேலையும் தாமதமாகிறது என பொதுமக்கள் தொடர்ந்து புகார் தெரிவித்ததால் அலுவலகங்களில் செல்போனுக்கு கட்டுப்பாடு விதித்திருக்கிறது கேரள அரசு. உத்தரவுடன் நிறுத்திக் கொள்ளாமல் இதனைக் கண்காணிக்க அந்தந்த துறைத் தலைவர்களையும் அறிவுறுத்தியுள்ளது. இப்படிக் கடுமையான உத்தரவைப் பிறப்பித்த போதும் அவசர காலங்களில் மட்டும் செல்போனை பயன்படுத்திக் கொள்ளலாம் என்றும் அரசு கூறியுள்ளது.

இந்த உத்தரவானது சரியான நோக்கத்திற்காக பிறப்பிக்கப்பட்டாலும் இது நடைமுறைக்கு சாத்தியமில்லாத விஷயம் என்றும், செல்போனைப் பயன்படுத்த முடியாதபோது அவசரகாலம் என்று எப்படி தெரிந்துகொள்வது என்றும் கேரள அரசு ஊழியர்கள் ஆதங்கப்படுகின்றனர்.

முத்தாய்ப்பாக, இந்த உத்தரவின் மூலம், அலுவலக நேரங்களில் செல்போனில் வெட்டி அரட்டை அடிப்பது குறைந்து, மக்கள் நலப் பணிகள் துரிதமாக நடக்கும் என்பது நிச்சயம். இதே நடைமுறையை  தமிழக அரசும் பின்பற்றலாமே.

நன்றி: புதிய தலைமுறை,  ஜூன், 28, 2012, (பக்கம் 26)
இவள் பாரதி

2 comments:

சித்ரவேல் - சித்திரன் said...

நல்ல ஒரு கேள்வி... ஆனா விடை காணமுடியாத கேள்வி. . !

புதிய தலைமுறைகளால் மட்டுமே இந்த கேள்வியை இனி யாரும் கேட்காமல் ஒழிக்க.... நேரத்தை வீணாக்காமல் செயல்பட முடியும். இது என் எண்ணம்... நன்றி

சித்ரவேல் - சித்திரன் said...

நல்ல ஒரு கேள்வி... ஆனா விடை காணமுடியாத கேள்வி. . !

புதிய தலைமுறைகளால் மட்டுமே இந்த கேள்வியை இனி யாரும் கேட்காமல் ஒழிக்க.... நேரத்தை வீணாக்காமல் செயல்பட முடியும். இது என் எண்ணம்... நன்றி


இவளின் உலகத்திற்குள்
வந்திருக்கும் உங்களுக்கு
நன்றியும்..வாழ்த்தும்..


அமைதி,அழகு,தனிமை

உங்களின் விருப்பம் எது?